உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்புக்கு கூடுதல் விலை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கரும்புக்கு கூடுதல் விலை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

நெல்லிக்குப்பம் : கரும்புக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், முதல்வருக்கு அனுப்பிய மனு;பஞ்சாப் மாநில அரசின் நடவடிக்கையால் அம்மாநிலத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகரித்ததோடு சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது. அங்குள்ள 15 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கடந்த 5ம் தேதி முதல் கரும்பு அரவை துவங்கியுள்ளது.அங்கு 9.5 சதவீத பிழிதிறன் உள்ள ஒரு டன் கரும்புக்கு கடந்த ஆண்டு 3,910 ரூபாய் வழங்கினர். அதனை நடப்பு ஆண்டு 4,150 ரூபாயாக உயர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளது.நடப்பு பருவத்தில் தமிழ்நாட்டை விட பஞ்சாப்பில் கரும்பு, சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது. அம்மாநில அரசு கரும்புக்கு பரிந்துரை விலை அறிவித்து, அதை வழங்கி வருவதால் தமிழ்நாட்டை விட ஒரு டன் கரும்புக்கு 800 ரூபாய் கூடுதலாக அங்கு கிடைக்கிறது. தமிழக அரசும் பரிந்துரை விலையை அறிவித்து கூடுதல் விலை கிடைக்க வழி செய்ய வேண்டும். மேலும் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தமிழக அரசு ஒரு ஏக்கர் கரும்பு நடவுக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை