நிவாரணம் கோரி விவசாயிகள் போராட்டம்: 60 பேர் மீது வழக்கு
காட்டுமன்னார்கோவில்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுப்பட முயன்ற விவசாய சங்கத் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட 60 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் காட்டுமன்னார்கோவிலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இதில் விவசாய சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், லட்சுமிகாந்தன், கண்ணன், அன்பழகன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் சீரணி அரங்கம் அருகில் திரண்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்து டி.எஸ்.பி., விஜியக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர். புகாரின் பேரில் விவசாய சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாள் பாண்டியன் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.