மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
26-Apr-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டைவிட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்ராஜா, 46. இவரது மகள் விஜயலட்சுமி, 20. இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் 13ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.
26-Apr-2025