உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்

குள்ளஞ்சாவடி: மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார். குள்ளஞ்சாவடி அடுத்த கிருஷ்ணபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகள் ரம்யா, 24; பட்டதாரி. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, பழனிவேல் அவரது மனைவி மற்றும், மகள் ரம்யா ஆகியோர் உறங்க சென்றனர். இதன் பின் அதிகாலை, 2:00 மணிக்கு ரம்யா வீட்டில் இருந்து திடீரென மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. தனது மகள் மாயமானது குறித்து பழனிவேல் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !