உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலுார்: விபத்து வாகனத்தை சோதனைக்கு அனுப்ப கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகன்,54; கடந்த 21ம் தேதி இவரது பைக் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.விபத்துக்குள்ளான வாகனத்தை, மோட்டார் வாகன ஆய்வாளர் சோதனைக்கு அனுப்புவதற்காக ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த பெண் போலீஸ் வசந்தி, கூகுள் பேவில் ரூ.200 லஞ்சம் வாங்கினார்.இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.பி., ஜெயக்குமார் நடத்திய விசாரணையில், லஞ்சம் வாங்கியது உறுதியானதை தொடர்ந்து, வசந்தியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை