உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றுமணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்

ஆற்றுமணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் ஆற்றுமணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் இன்று (நவ.,11) கார்குடல் மணிமுக்தாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது , அப்பகுதியில் டிராக்டரில் ஆற்றுமணல் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வருவதை பார்த்த மர்மநபர்கள், டிராக்டரை அங்கேயே விட்டு தப்பினர். டிராக்டரை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி