உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.டி., சீயோன் பள்ளியில் கலைகளின் விழா

எஸ்.டி., சீயோன் பள்ளியில் கலைகளின் விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி., சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலைகளின் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாகி இயக்குனர் தீபா தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியர் ஆண்டனிராஜ், வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தனர். விழாவில், இயற்கை தினத்தையொட்டி பசுமையையும், பசுமையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவி, மாணவிகள் பச்சை நிற ஆடை அணிந்தும், பல்வேறு ஓவியங்கள் வரை படங்களுடன் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்தனர்.மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை