உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இறுதி வாக்காளர் பட்டியல்

இறுதி வாக்காளர் பட்டியல்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சி 10வது வார்டுக்கான சுருக்க முறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியல் வழங்கினார். தி.மு.க., வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், அ.தி.மு.க., பேரூர் செயலர் பாலமுருகன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், காங்., பொருளாளர் லோகநாதன், பா.ஜ., பேரூர் தலைவர் கமலக்கண்ணன், தே.மு.தி.க., பேரூர் செயலர் முத்து பங்கேற்றனர். பேரூராட்சி 10வது வார்டில் வெற்றி பெற்று, துணை சேர்மனாக இருந்த தாமோதரன், கடந்த 2024ம் ஆண்டுஇறந்ததால் அந்த வார்டுக்கான உறுப்பினர் பதவி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை