உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 51 கிராம் நகை கையாடல்; நிதி நிறுவன மேலாளர் கைது

51 கிராம் நகை கையாடல்; நிதி நிறுவன மேலாளர் கைது

விருத்தாசலம், ; நிதி நிறுவனத்தில் 51 கிராம் நகையை கையாடல் செய்த பொதுமேலாளரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த சின்னகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் மகன் ஞானசேகரன்,35; பெஸ்ட் மணி கோல்டு நிதி நிறுவனத்தின், விருத்தாசலம் கிளையின் பொதுமேலாளராக பணி புரிந்து வந்தார்.இவர், வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 51 கிராம் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை கையாடல் செய்துள்ளார்.இதுகுறித்து மண்டல மேலாளர் ராகுல்காந்தி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, ஞானசேகரனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 51 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி