உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ தடுப்பு மற்றும் மீட்பு விழிப்புணர்வு

தீ தடுப்பு மற்றும் மீட்பு விழிப்புணர்வு

விருத்தாசலம், : விருத்தாசலம் பஸ் நிலையத்தில், விருத்தாசலம் ரோட்டரி சங்கம் மற்றும் தீயணைப்பு நிலையம் சார்பில், பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலர் பரமசிவம், பொருளாளர் பிரசன்னா, திட்ட தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரகாஷ்ராஜ், குமார், எலைட் ரோட்டரி குருசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில், விருத்தாசலம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள், பொது மக்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தீபாவளி பண்டிகையொட்டி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ