உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு வெடித்து தீ விபத்து 

பட்டாசு வெடித்து தீ விபத்து 

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 3 இடங்களில் பட்டாசு தீ விபத்து ஏற்பட்டது.மாவட்டத்தில் கடலுார், வடலுார், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை உட்பட 15 தீயணைப்பு நிலையங்கள் உள்ளது.மாவட்டம் முழுதும் தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு தீ விபத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் பணியில் இருக்குமாறு தீயணைப்பு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிகமாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மதியம் வரை பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் சிதம்பரத்தில் தலா ஒரு பட்டாசு தீ விபத்து ஏற்பட்டது. அந்தந்த பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை