உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட ஐந்து பேர் கைது

நெல்லிக்குப்பத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட ஐந்து பேர் கைது

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையில் போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் விஜய்யை பிடித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பில்லாலி தொட்டியை சேர்ந்த சூர்யா மனைவி பிரித்தி,26, மச்சேந்திரன் மகன் ஆகாஷ்,20, ராஜகோபால் மகன் விஜய்,23, கோண்டூர் ராமு மகன் ராகவன்,23, திருப்பாதிரிபுலியூர் காஜா மைதீன் மகன் பர்கத்அலி,24; ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட பிரித்தியின் கணவர் சூர்யா, கடந்த வாரம் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி