கொள்ளிடம் கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காட்டுமன்னார்கோவில் : கடலுார் மாவட்டத்தில் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நே ற்று காலை முழு கொள் ளளவான 120 அடி எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர், வினாடிக்கு 1 லட்சம் கன அடி, பவானி ஆற்றில் இருந்து 10 ஆயிரம் கன அடி, அமராவதி ஆற்றில் இருந்து 15 ஆயிரம் கன அடி என மொத்தம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால், மேலனை மற்றும் கல்லணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், படிப்படியாக நீர் வரத்துக்கு ஏற்ப ஒரு லட்சம் கன அடியாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. எனவே கீழணையில் இருந்து முன்னெச்சரிக்கையாக மதியம் 12:00 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கடலுார் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என கீழணை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.