உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அந்நிய முதலீடு 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது: மாஜி அமைச்சர் சம்பத்

அந்நிய முதலீடு 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது: மாஜி அமைச்சர் சம்பத்

கடலுார்: தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் 4வது இடத்தில் இருந்த அந்நிய நேரடி முதலீடு தற்பாது 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என மாஜி., அமைச்சர் சம்பத் பேசினார்.கடலுார் புதுப்பாளையத்தில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:தமிழகத்தில் ஆட்சி நடத்தும் தி.மு.க., மக்கள் நலம் காக்கும் அரசாக இல்லை. முதல்வர் ஸ்டாலின், இதுவரை 41 நாடுகளுக்கு சென்று 20,329 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றுள்ளோம். இதன் மூலம் 31,500 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறுகிறார். இதெல்லாம் வெறும் நாடகம். தி.மு.க., இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்தது. இதில் எத்தனை நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அந்நிய நேரடி முதலீடு நான்காவது இடத்தில் இருந்தது. தற்போது 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. போர்டு கார் கம்பெனி தமிழகத்திற்கு வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அது எத்தனை நாட்களில் வரும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. இது தொடர்பாக முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ