கடலுாரில் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
கடலுார்: எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கடலுாரில் எம்.ஜி.ஆர்., 38 வது நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க., சார்பில் நேற்று அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு தீபமேற்றியும் வழிபாடு நடந்தது. கடலுார் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட செயலாளர் சம்பத் எம்.ஜி.ஆர்., உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார், மாநில மீனவர் அணி இணை செயலாளர் தங்கமணி, மாநில மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, மாநில ஜெ., பேரவை துணைச்செயலாளர் ஆறுமுகம், கடலுார் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் நத்தம் கோபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் சாந்தி, கடலுார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.