உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் கடத்தல் முன்னாள் ராணுவ வீரர் கைது

மதுபாட்டில் கடத்தல் முன்னாள் ராணுவ வீரர் கைது

சிதம்பரம் : சிதம்பரம் அருகே மதுபாட்டில் கடத்திய முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் மதுவிலக்கு போலீசார் நேற்றிரவு சேத்தியாத்தோப்பு அருகே பி.கே.டி., பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ஸ்ரீமுஷ்ணம், புதுக்குப்பத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிலவேந்திரன்,55; என்பதும், புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து பிலவேந்திரனை கைது செய்து, 9,000 ரூபாய் மதிப்புள்ள 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை