உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கள்ள நோட்டு மாஜி வி.சி., நிர்வாகி கைது

கள்ள நோட்டு மாஜி வி.சி., நிர்வாகி கைது

ராமநத்தம்:கடலுார் மாவட்டம், ராமநத்தம் அதர்நத்தம் கிராமம் செல்வம், 39; வி.சி., கட்சி முன்னாள் நிர்வாகி. வழக்கு விசாரணைக்காக அவரை தேடி மார்ச் 30ல் போலீசார் வீட்டிற்கு சென்றபோது செல்வம் உள்ளிட்ட 12 பேர் கும்பல் கள்ள நோட்டு அச்சடித்தது தெரிந்தது.போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்த், 30, கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் சக்திவேல், 26, உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அச்சடிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் பதுங்கியிருந்த செல்வம், வள்ளரசு, 25, ஆவட்டி பிரபு, 32, உள்ளிட்ட ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி