உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு பாக்ஸ் விற்பனை நால்வர் கைது

பட்டாசு பாக்ஸ் விற்பனை நால்வர் கைது

விருத்தாசலம்: அனுமதியின்றி பட்டாசு பாக்ஸ் விற்ற நால்வரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையம், பாலக்கரை, கடைவீதி, புறவழிச்சாலையில் அனுமதின்றி பட்டாசு பாக்ஸ் விற்பனை செய்த வெங்கடாசலம் மகன் செந்தில்குமார், 41, கலியபெருமாள் மகன் கருணாநிதி, 57, ஜெயராமன் மகன் கணேஷ், 57, கண்ணுசாமி மகன் ராஜா, 54, ஆகியோரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை