உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழையில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

மழையில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

காட்டுமன்னார்கோவில் ; காட்டுமன்னார்கோவில் பகுதியில் கன மழையின் காரணமாக நான்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்துவருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகள், சாகுபடி நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டி.புத்துாரில் வடிவேல் மகன் மகாலிங்கம் கூரைவீடு ,நாட்டார்மங்கலம் அரசன் மகன் வேலாயுதம், மேலராதாமூர் ராமகிருஷ்ணன் மகன் தர்மராஜ், மன்னார்குடி கஸ்பா பாலகிருஷ்ணன் மனைவி வனசுந்தரி ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதனை வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை