மேலும் செய்திகள்
10 ஜோடிக்கு இலவச திருமணம் பதிவு செய்ய அழைப்பு
13-Jun-2025
கடலுார்: ஹிந்து சமய அறநிலையத்தறை சார்பில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கோவிலில் இரண்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இலவச திருமணம் நடத்தும் திட்டம் உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். இத்திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மணமக்களுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம், ஆடைகள், மெத்தை, பீரோ, கட்டில் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. கோவில் செயல் அலுவலர் சுரேஷ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
13-Jun-2025