உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடிக்கடி போக்குவரத்து நெரிசல்; விருதையில் வாகன ஓட்டிகள் அவதி

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்; விருதையில் வாகன ஓட்டிகள் அவதி

விருத்தாசலம்; விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் பைக், கார்களை தாறுமாறாக நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.விருத்தாசலம் ஜங்ஷன் சாலை வழியாக பஸ், லாரி, வேன் டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் முக்கிய நகரங்களுக்கு சென்று வருகின்றன. பரபரப்பான இந்த சாலையில் நடுவே பைக், கார்களை சிலர் நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், ஜங்ஷன் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரில்சலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.இதேபோல், நேற்று பகல் 1:00 மணியளவில், ஜங்ஷன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் சீராக சுமார் அரைமணி நேரமானது. எனவே, ஜங்ஷன் சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை