மேலும் செய்திகள்
குட்கா கடத்திய ஜீப்பைதுரத்தி பிடித்த போலீஸ்
04-Apr-2025
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் 27 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார்.மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் வடக்குத் தெருவை முனியன் மகன் அரசு,47; இவர், கடந்த 1997ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசுவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவம்பாரில், பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி தலைமையிலான போலீசார், அவரை நேற்று அதிகாலை கைது செய்தனர்.விசாரணையில், ஜாமினில் வெளிவந்த அரசு, பக்ரைன் நாட்டிற்கு தப்பிச்சென்று, 2 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின், மும்பைக்கு திரும்பிய அவர், தலைமறைவாக வாழ்ந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பியதும் தெரிந்தது.
04-Apr-2025