உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் தலைமறைவு குற்றவாளி கைது  

நெய்வேலியில் தலைமறைவு குற்றவாளி கைது  

கடலுார்:நெய்வேலியில் போக்சோ வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2025ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஸ்ரீநாத் பிரேம் 21;. இவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அதனால் கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. தலைமறைவாக இருந்து வந்த ஸ்ரீநாத் பிரேம்மை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ