மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது
10-Apr-2025
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த மணி மகன் சூர்யா, 27; இவரை, நெல்லிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், இவரது நடவடிக்கையை தடுக்க, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ஜெயக்குமார், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து, கலெக்டர் உத்தரவுபடி, சூர்யா குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
10-Apr-2025