உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மர்மமான முறையில் குப்பை எரிந்தது

மர்மமான முறையில் குப்பை எரிந்தது

கடலுார்: கடலுார் குப்பங்குளத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பையில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. கடலுார், குப்பங்குளத்தில் தேங்கிக் கிடந்த குப்பை நேற்று மதியம் 1:30 மணிக்கு மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்து சுற்றியிருந்த குப்பைகளுக்கு பரவியது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்த சென்று, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். குப்பை எரிந்ததால், அதிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்ததில் புகைமூட்டம் ஏற்பட்டதால், சுற்று வட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை