பொதுக்குழு கூட்டம்
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். அறிவுக்கண்ணு வரவேற்றார். பொதுச் செயலாளர் இளங்கோ அறிக்கை வாசித்தார். பொருளாளர் மகேந்திரன் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்தார். ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவிசங்கர் பேசினார். கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை பணி ஓய்வு பெற்ற 1,800 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பயன்கள், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.