உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் ஜே.சி.ஐ., த.வீ.செ. கல்வி நிறுவனங்கள், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, சங்கீதா பல் மருத்துவமனை ஆகியன சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.ஜேசீஸ் துணை தலைவர் திலீபன் தலைமை தாங்கினார். சாசன தலைவர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்துாரபாண்டியன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்றார். த.வீ.செ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் செந்தில்நாதன் முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் விமல்குமார்,கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 16 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். 120 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் த.வீ.செ., பள்ளி முதல்வர் ஆர்த்தி சுரேஷ், முன்னாள் தலைவர்கள் வேல்முருகன், ேஷக்சேட், மனோகர், குருராஜன், தினகரன், விஜயன், சிவக்குமார், கோபிநாத், துணைத் தலைவர் விக்னேஷ், முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வம் பங்கேற்றனர். பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி