உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு தொல்லை; வாலிபர் மீது போக்சோ

சிறுமிக்கு தொல்லை; வாலிபர் மீது போக்சோ

கடலுார்; சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.கடலுார், திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் முரளி மகன் விக்னேஷ்,25; கூலித்தொழிலாளி. இவர் 16வயது சிறுமியை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, ஆசைவார்த்தை கூறி நெருங்கிப்பழகினார். இதையறிந்த சிறுமியின் தாய், கடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், விக்னேஷ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி