உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்பு

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்பு

கடலுார்: கடலுார் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்ந்த மாணவிகளை கிரீடம் அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.தமிழகம் முழுதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்பட்டன. புதியதாக பள்ளியில் சேர்ந்த மாணவிகளை வரவேற்க பள்ளி நிர்வாகத்தினர், பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.கடலுார், மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக 6ம் வகுப்பில் சேர்ந்த மாணவிகளை தலையில் கிரீடம் அணிவித்து தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், 'இப்பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவியும் இளவரசிகள், அதனால் அனைவருக்கும் கிரீடம் அணிவித்து வரவேற்கிறோம்' என்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் லியோனார்டு ஜானி, உதவி தலைமை ஆசிரியர்கள் கோபி, மணி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை