உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோ ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்ட முகாம்கள் மண்டல மேலாளர் தகவல்

கோ ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்ட முகாம்கள் மண்டல மேலாளர் தகவல்

கடலுார் : கடலுார் மண்டலத்தில் உள்ள 14 கோ ஆப்டெக்ஸ் ஷோ ரூம்களில் வரும் 15ம் தேதி நடக்கும் கோ ஆப்டெக்ஸ் மாதாந்திர சிறப்பு சேமிப்பு திட்ட முகாம்களில் அதிகமான பொதுமக்களை சேர்க்க உள்ளதாக மண்டல மேலாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கோ ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் (CMSS) ரூ.300ல் இருந்து ரூ.3,000 வரை பொதுமக்கள் 11 மாத சேமிப்பு தொகையுடன் 12வது மாத தொகையை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தி முதிர்வு தொகைக்கு ஆடை வாங்கலாம்.அப்போது ஆடைக்கான விலையில் 20 முதல் 30 சதவீத தள்ளுபடியுடன் பெறலாம். இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் அதிக பலன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் பொதுமக்களை சேர்க்க வலியுறுத்தி, கடலுார் மண்டலத்தில் செயல்பட்டு வரும் 14 ஷோரூம்களில் நவ., 15ம் தேதி சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இதில் பொதுமக்கள் சேர்ந்து அதிக பயனடையலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை