உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

கடலுார்: கடலுாரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் காந்தி, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். இணை செயலாளர் ஆதிசங்கர் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பழனி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன் அறிக்கை வாசித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், இணை செயலாளர்கள் பொற்செழியன், நாகம்மாள் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம் நிறைவுரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீ்ர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை