உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட இடமில்லை என்றாலும் சாதிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

விளையாட இடமில்லை என்றாலும் சாதிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

நடுவீரப்பட்டு: கடலுார் பள்ளிகளுக்கு இடையே குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 17 வயதிற்குட்பட்டோருக்கான கபடியில் விளையாடி, இரண்டாம் இடம் பிடித்தனர்.17 வயதிற்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் மாணவர் அருள்பாண்டியன் இரண்டாம் இடம், 14 வயதிற்குட்ட மாணவியர் செஸ் போட்டியில் மாணவி சண்முகபிரியா மூன்றாம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் இப்பள்ளியில் படிக்கும் 100 மாணவர்கள் கபடி, வாலிபால், சிலம்பம், கேரம் மற்றும் தடகள போட்டியில் கலந்து கொண்டனர். பள்ளியில் விளையாட்டு திடல் இல்லாத போதும், இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று சாதித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை