மேலும் செய்திகள்
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
16-Mar-2025
கடலுார், : கடலுார் சி.கே., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, சி.கே., கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கெவின்கேர் குழும தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்களில் இடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பேசினார். பொறியியல் கல்லுாரி முதல்வர் சரவணன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் பிலால் உணவு குழும நிறுவனர் அப்துல் ரஹீம் கல்வியியல், மேலாண்மையியல் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற 982 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். சி.கே., கல்விக்குழும நிர்வாக இயக்குனர் அமுதவல்லி ரங்கநாதன் வாழ்த்திப் பேசினார்.துணை முதல்வர் அருளாளன் நன்றி கூறினார்.
16-Mar-2025