மேலும் செய்திகள்
வீ.ஜீ.விகாஸ் பள்ளியில்மழலையருக்கு பட்டமளிப்பு வி
09-Mar-2025
கடலுார்: குறிஞ்சிப்பாடி அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் யூ.கே.ஜி., எல்.கே.ஜி., மழலையர்களுக்கு பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் பங்கு தலைப்பில் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் பேசினார். இறுதியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி செயலர் சட்டநாதன், கல்விக் குழும இயக்குனர்கள் கார்த்திகேயன், திராவிட அரசு, வேலு, ராஜேந்திரன், குமார், பாலசுப்ரமணியன், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.துணை முதல்வர் நன்றி கூறினார்.
09-Mar-2025