நாளை கிராம சபை கூட்டம்
மந்தாரக்குப்பம்: உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நாளை (23 ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.ஊராட்சி பகுதிகளில் ஆண்டு தோறும் குடியரசு தினமான ஜன. 26, உலக தண்ணீர் தினமான மார்ச் 22. தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆக.15., காந்தி ஜெயந்தியான, அக்.2., உள்ளாட்சிகள் தினமான நவ. 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.கடந்த நவ.1., ம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்ளுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை (நாளை 23 ம்) தேதி நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது..கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து மழைநீரை வெளியறே்றுதல், குடிநீர், மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தல் வாய்க்காலில் உள்ள குப்பைகள், அடைப்புகளை அகற்றுதல், உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாளை நடைபெறும் கிராம சபை கூட்டம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.