உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலு

நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி முன்னிட்டு, பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.கோவிலில் 21 அடி அகலம், 21 அடி நீளம் மற்றும் 21 அடி உயரத்தில், 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலுவில் சுமார் 4, 500க்கும் மேற்பட்ட பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இக்கொலு வைபவம் நேற்று தொடங்கியது. நவராத்திரியையொட்டி, இந்த கொலு தொடங்கப்பட்டிருப்பதால், நேற்று முதல் 11ம் தேதி வரை நாள்தோறும் இரவு நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ