பசுந்தாள் பயிர் விளைச்சல் வேளாண் அதிகாரி ஆய்வு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் சுற்று வட்டார பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தாள் உர பயிர்களை வேளாண்மை இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 35 ஆயிரம் ஏக்கரில் பயிரிட தக்கை பூண்டு, சணப்பை விதைகள் வழங்கப்பட்டது. தற்போது ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 8,000 ஏக்கர் நிலத்தில் தக்கை பூண்டு பயிர்கள் வளர்ந்து சம்பா பருவத்திற்கு மடக்கி உழுதுவருகின்றனர். இந்நிலையில் கடலுார் வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம் ஆகியோர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் தக்கை பூண்டு பயிரிடப்பட்டுள்ள வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.உதவி வேளாண் இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.