மேலும் செய்திகள்
குறைதீர் நாள் கூட்டம்: 621 மனுக்கள் குவிந்தன
24-Dec-2024
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 8 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 517 மனுக்கள் பெறப்பட்டன. இதில், பணியின்போது எதிர்பாராமல் இறந்த பணியாளரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் 8 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.மேலும், ஒரத்துாரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் இறந்ததற்கு, இறப்பு காப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் பெறப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு கலெக்டர் வழங்கினார்.அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் லதா, பயிற்சி கலெக்டர் ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Dec-2024