உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்னாள் படை வீரர்களுக்கு  13ம் தேதி குறைதீர்வு கூட்டம் 

முன்னாள் படை வீரர்களுக்கு  13ம் தேதி குறைதீர்வு கூட்டம் 

கடலுார் : கடலுாரில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் படைப் பிரிவில் பணிபுரியும் வீரர் களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலக பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, முன்னாள் படைவீரர்களிடம் குறைகளை கேட்டறிகிறார். எனவே, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குடும்பத்தினரின் கோரிக்கைகளை மனுவாக இரு பிரதியுடன் படைவீரர் அடையாள அட்டை நகலுடன் இணைத்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை