1,000 ஓட்டுநர்களுக்கு சீருடை ஜி.ஆர்.கே.குழுமம் வழங்கல்
கடலுார்: கடலுாரில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஜி.ஆா்.கே.குழுமம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது. கடலுார் வேல்முருகன் தியேட்டர் வளாகத்தில் நடந்த விழாவில், ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், 1,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கி, ‘ஆட்டோவில் கூடுதல் பயணிகளை ஏற்றக் கூடாது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். ஆட்டோக்களை வேகமாக ஓட்டக் கூடாது என, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து, மகேந்திரா நிறுவனத்தின் ‘யூடோ’ எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகம் செய்து வைத்தார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். விழாவில், போக்குவரத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், தெய்வநாயகம், பொது மேலாளர் குரு பிரசாத், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.