வழிகாட்டி பலகை மக்கள் கோரிக்கை
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதாரநிலையம் செல்லும் வழியில் வழிகாட்டி பலகை வைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடுவீரப்பட்டு-குறிஞ்சிப்பாடி சாலையில் இருந்து நைனாப்பேட்டை செல்லும் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கான வழிகாட்டி பலகை இல்லை.இதனால், அருகில் உள்ள கிராமத்தினர் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வரும் போது, வழி தெரியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் வழி தெரியாமல் நேராக குறிஞ்சிப்பாடி சாலையில் சென்று, மீண்டும் திரும்பி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வழிகாட்டி பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.