உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் ரவுடி உட்பட 2 பேருக்கு குண்டாஸ்

கடலுாரில் ரவுடி உட்பட 2 பேருக்கு குண்டாஸ்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் ரவுடி உட்பட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த பிலாக்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவர், தனது காரை கடலுார் மாவட்டம், வேப்பூரில் உள்ள பன்னுமணி (எ) மணிகண்டனிடம் அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் பெற்றார். கடந்த 17ம் தேதி, வெற்றிச்செல்வன் வேப்பூர் சென்று காரை தருமாறு மணிகண்டனிடம் கேட்டார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் வெற்றிச்செல்வனை, மணிகண்டன் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை,29; கைது செய்தனர். இவர் மீது வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் 'போக்சோ', மோசடி, கொலை முயற்சி என 9 வழக்குகள் உள்ளன.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரை சேர்ந்தவர் அய்யனார்,45; இவர், கடந்த 15ம் தேதி, 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். கடலுார் அனைத்து மகளிர் போலீசார், அய்யனாரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.மணிகண்டன், அய்யனாரின் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டருக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி