உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தயானந்த சுவாமிகளுக்கு  நாளை குருபூஜை பெருவிழா 

தயானந்த சுவாமிகளுக்கு  நாளை குருபூஜை பெருவிழா 

கடலுார்: புதுப்பாளையம் தயானந்த சுவாமிகள் மடாலயத்தில் குருபூஜை பெருவிழா நாளை நடக்கிறது. கடலுார், புதுப்பாளையம் தயானந்த சுவாமிகள் மடாலயத்தில் 120வது குருபூஜை பெருவிழா நாளை 19ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி நேற்று தயானந்த சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று (18ம் தேதி) காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை 19ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைப்பெற்று மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மாலை தேவார இன்னிசை, சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தயானந்த சுவாமிகள் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை