மேலும் செய்திகள்
மணல் கடத்தல்
27-Feb-2026
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டிபன் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, மணக்கொல்லை கிராமத்தில் டிபன் கடை நடத்தி வரும், ராமச்சந்திரன் மகன் சிவக்குமார், 54, என்பவர், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பது தெரிந்தது. அவரிடமிருந்து 12 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனர்.
27-Feb-2026