உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஹான்ஸ் விற்றவர் கைது

 ஹான்ஸ் விற்றவர் கைது

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் ஹான்ஸ் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். குள்ளஞ்சாவடி போலீஸ் எஸ்ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சிந்தாமணிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன், 49; என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை