முன்னாள் காங்., தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து
கடலுார்: காங்.,முன்னாள் தலைவர் அழகிரிக்கு, கடலுார் மாநகர நிர்வாகிகள் சார்பி ல் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு காங்., க மிட்டி முன்னாள் மாநிலத் தலைவர் அழகிரி பிறந்தநாள் விழா, சிதம்பரத்தில் நடந்தது. அதில் கடலுார் மாநகர காங்.,தலைவர் வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் காமராஜ், கிஷோர்குமார், ராஜேஷ், மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.