உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு அறிவு, ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் ஹயகிரிவர் பப்ளிக் பள்ளி மற்றும் டி.வி.ஆர்., கல்லுாரி

மாணவர்களுக்கு அறிவு, ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் ஹயகிரிவர் பப்ளிக் பள்ளி மற்றும் டி.வி.ஆர்., கல்லுாரி

ஹயகிரிவர் பப்ளிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் டி.வி.ஆர்., கல்வியல் கல்லுாரி நிறுவன தாளாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ரங்கமணி பள்ளி,கல்லுாரி சிறப்புகள் குறித்து கூறியதாவது: புதுச்சேரி, கடலுார் இ.சி.ஆர்., சாலையில் கடலுாருக்கு மிக அருகில் புதுச்சேரிமாநிலம் முள்ளோடை (மதிகிருஷ்ணாபுரம்) டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரிமற்றும் ஹயகிரிவர் பப்ளிக் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் நல்ல ஆசிரிய, மாணவர்களை உருவாக்குவதே எங்களது டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி நோக்கம். எங்களது கல்லுாரி 2004ம் ஆண்டு ஆசிரிய பயிற்சி நிறுவனமாக தொடங்கப்பட்டு பின் மத்திய, மாநில அரசின் அங்கீகாரத்துடன்புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2007ம் ஆண்டு முதல் கல்வியியல் கல்லுாரியாக கடந்த 17 ஆண்டுகளாக கல்வி சேவை அளிக்கிறது.கல்வி கடவுளாகிய ஹயகிரிவர் ஆசியுடன் துவக்கப்பட்டது தான் எங்களது ஹயகிரிவர் பப்ளிக் பள்ளி ஆகும். இப்பள்ளி முதலில் ஆரம்ப பள்ளியாக 2009ல்ஆரம்பிக்கப்பட்டு பின் மேல்நிலைப் பள்ளியாக தற்போது சிறப்பான முறையில்செயலாக்கம் பெற்றுள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை இப்பகுதி கிராமப்புற ஏழை மாணவர்களின் ஆங்கில வழி கல்வி கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.எங்கள் கல்வி நிறுவனத்தில் காற்றோட்டமுள்ள வகுப்பறைகள், விசாலமான விளையாட்டு திடல் மற்றும்உபகரணங்கள் கல்வி இணைசார் செயல்பாடுகளான கராத்தே, யோகா, சதுரங்கம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள்அறிவியல் சார் திறன்கள் சமூக ஒருமைப்பாடு ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.மாணவர்களுக்கு வாகன வசதி, பல ஆயிரம் புத்தகங்கள், நாளிதழ்கள், இணைய வழி புத்தகங்கள் கொண்ட நுாலக வசதி, பயிற்சி மற்றும் அனுபவம் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு இணைய வழி கல்வி மூலமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.ஹயகிரிவர் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து ஏழுஆண்டுகளாக நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இக்கல்வி ஆண்டு 2023-24 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளிக்கு பெருமை சேர்த்து 90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுத் துறையில் உயரிய பதவியில் பணியாற்றுகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ