உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உயர் தொழில்நுட்ப சர்வத்ரா வைபை சேவை கடலுார் பி.எஸ்.என்.எல்., மண்டலத்தில் துவக்கம்

உயர் தொழில்நுட்ப சர்வத்ரா வைபை சேவை கடலுார் பி.எஸ்.என்.எல்., மண்டலத்தில் துவக்கம்

கடலுார்: கடலுார் பி.எஸ்.என்.எல்., துறையில் உயர் தொழில்நுட்பம் கொண்ட சர்வத்ரா வைபை சேவை துவங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டம் கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய்மாவட்டங்களில்சர்வத்ரா பி.எஸ்.என்.எல் வைபை சேவை துவக்கநிகழ்ச்சி, கடலுார் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நடந்தது. பி.எஸ்.என்.எல் அகில இந்திய தலைவர் ராபர்ட் ரவி தலைமைதாங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொதுமேலாளர் பார்த்திபன், முதுநிலை பொதுமேலாளர் ஜெயக்குமார் ஜெயவேலு, முதன்மைபொதுமேலாளர் சுதாகர் ராவ், கடலுார் பொதுமேலாளர் பாலச்சந்திரன் மற்றும் அதிகாரிகள்,அலுவலர்கள் பங்கேற்றனர்.சர்வத்ரா வைபை சேவை குறித்து முதுநிலை பொதுமேலாளர் கூறுகையில், இச்சேவை நவீன உயர் தொழில்நுட்ப பயன்பாடு கொண்டதாகஉள்ளது. 30 முதல் 300 வரையில் எம்.பி.பி.எஸ்., அதிகவேக தொழில் நுட்பம்உருவாக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., எஸ்.டி.டி போன் இணைப்பு வைத்திருப்போர் வெளியூர் சென்றாலும், சர்வத்ரா வைபை பயன்படுத்தி உபயோகப்படுத்தலாம். வரும் காலங்களில் கேபிள் டிவி சேனல்கள், இண்டர்நெட் பயன்பாட்டிற்கு வரும்.பி.எஸ்.என்.எல்., பாரத் பைபர் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், https://portal.bsnl.in/ftth/wifiroaming என்ற இணையதளத்தில் தங்களது FTTH எண் மற்றும்அதனுடன் இணைந்த மொபைல் எண் மற்றும் பெறப்பட்ட OTP யை உள்ளீடு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் பின்னர் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மூலம் வாடிக்கையாளரின்மோடம், சர்வத்ரா வைபையில் இணைப்பு செய்து கொடுக்கப்படும்.வாடிக்கையாளர்கள் வீடுஅல்லது அலுவலகத்தின் பைபர் இணைப்பை மொபைல், டேப், லேப்டாப், டி.வி., போன்றஅதிகபட்சமாக நான்கு சாதனங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை