உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய்க்கு உயர்தர சிகிச்சை

கிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய்க்கு உயர்தர சிகிச்சை

கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை, கடந்த 55 ஆண்டுகளாக கடலுார் மற்றும் பல்வேறு மாவட்டமக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை செய்து வருகிறது. இந்நிலையில், புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்க பிரத்யேகமான மருத்துவமனையை துவக்கி உள்ளது.குறிப்பாக, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும்பெருநகரங்களில் புற்று நோய் சிகிச்சை பெற இயலாமையால் பாதிக்கப்பட்டனர். இதனை போக்கும் வகையில் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை 6 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, 70,000 பேர் வரையில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.புற்றுநோய மருந்துகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்படுகிறது.புற்றுநோய் குணப்படுத்துவதில் கதிரியக்க சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு,நிறுவப்பட்டுள்ள 'எலக்டா சைனர்ஜி மல்டி எனர்ஜி லைனர் ஆக்சிலேட்டர்' என்ற இயந்திரம்சிறப்பாகவும், துல்லியமாகவும் புற்றுநோயுள்ள பகுதியை மட்டும் அழிக்கக் கூடிய திறன் வாய்ந்தது.நியூக்ளியர் மெடிசன் மூலமாக நோயுற்ற உறுப்புகளில் திசுக்களின் தன்மையை ஆய்வு செய்து,அதன் செயல் திறனை காண்பதன் மூலமாக பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைஅளவிட முடியும். குறிப்பாக, இருதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லிரல் போன்ற உறுப்புகளில்நோயின் தன்மையை இதன் மூலமாக கணிக்கலாம்.இந்தாண்டு 'காமா கேமரா ஸ்கேனர்' சேவை துவங்கப்பட உள்ளது. புற்றுநோய் பூரணமாககுணமடைய தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாக கிருஷ்ணாபுற்றுநோய் மருத்துவமனை உள்ளது. கடலுார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து அடையாளமாகவிளங்கும் கிருஷ்ணா மருத்துவமனை, மக்களுக்கு மருத்துவ சேவையை சிறப்பாகவழங்கிவருகிறது. நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் சேவையை பாராட்டி, கடலுார்மாவட்ட கலெக்டர் விருது வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை