உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் கைது

சேத்தியாத்தோப்பு, : பாளையங்கோட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை, கீழ்பாதி கடை வீதியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் ராஜன், முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர். மேல்பாதி சிவன் கோவிலை மீட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, அங்கு வந்த டி.எஸ்.பி., விஜிகுமார் மற்றும் சோழத்தரம் போலீசார் அனுமதியன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கலைந்து போகுமாறு கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்திய 23 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ